ஆப்நகரம்

வேலைக்கு செல்லும் வயதினர் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?

வேலைக்கு செல்ல்லும் வயதினரின் எண்ணிக்கையில் தமிழகம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Samayam Tamil 4 Jul 2020, 12:49 pm
இந்தியா உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகையான மக்கள் தொகையால் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன லாபம் என்பது ஒரு விவாதமாக இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் வேலை செய்யக்கூடிய வயது வரம்பில் இருப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
Samayam Tamil மக்கள் தொகை


2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாதிரி பதிவு அமைப்பின் (Sample Registration System) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மத்திய மக்கள் தொகை ஆணையர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு இயங்குகிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் (அதாவது 66 விழுக்காட்டினர்) 15 முதல் 59 வயது வரம்பில் இருப்பதாக தெரிகிறது.

2013ஆம் ஆண்டு முதல் இந்த வயது வரம்பிலானவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. வேலை செய்யக்கூடிய இந்த வயது வரம்பிலானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கினர் 12 மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சுமார் 70 விழுக்காட்டினர் ஆந்திரம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

முதலிடத்தில் 71.1 விழுக்காட்டுடன் தெலங்கானா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் 70.9 விழுக்காட்டுடன் ஆந்திரம் இருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டெல்லி (69%), மத்திய பிரதேசம் (63.3%), உத்தராகண்ட்(62.4%), பீகார் (59.7%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. தமிழகம் 68.6 விழுக்காட்டுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்