ஆப்நகரம்

ஆதார் சேவைகள் நிறுத்தம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆதார் தொடர்பான இரண்டு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 27 Jun 2022, 11:44 am
இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு, சிலிண்டர் கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் ஆதார் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
Samayam Tamil aadhaar


இவ்வாறு மிகவும் முக்கியமான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை வாடிக்கையாளர்களே செய்துகொள்ளும் வசதி உள்ளது. அதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு (UIDAI) வழங்குகிறது. மொபைல் நம்பர், கைரேகைப் பதிவு போன்ற முக்கியமான அப்டேட்களை ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்றூ திருத்தம் செய்ய வேண்டும். முகவரி போன்ற விவரங்களே வாடிக்கையாளர்கள் தாங்களாகவே ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்துகொள்ள முடியும்.

இந்நிலையில், ஆதார் அப்டேட் விஷயத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்களை ஆதார் அமைப்பு கொண்டுவந்துள்ளது. அதாவது, முகவரி மாற்றத்துக்கான 'address validation letter' ஆப்சன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை வாடிக்கையாளர்கள் யாரும் இந்த வசதியில் கீழ் தங்களது முகவரியை அப்டேட் செய்ய முடியாது. ஆதார் வெப்சைட்டில் இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் வேலை மாற்றம் காரணமாக வெவ்வேறு இடங்களில் சென்று தங்குவோருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களின் இனி முகவரியை திருத்தம் செய்வது கடினமாகியுள்ளது.

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்காது.. உடனே இந்த வேலைய முடிங்க!

இன்னொரு அறிவிப்பையும் ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, ஆதார் கார்டின் பழைய பிரிண்ட் அவுட்டை இனி வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது. அதற்குப் பதிலாக பிவிசி எனப்படும் பிளாஸ்டிக் கார்டை மட்டுமே பிரிண்ட் எடுத்து வாங்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்