ஆப்நகரம்

சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு.. வாடிக்கையாளர்கள் பாவம்!

சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை குறைத்த வங்கி.

Samayam Tamil 4 Apr 2022, 1:48 am
சிறு நிதி வங்கியான உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank) சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil saving account


சேமிப்புக் கணக்குகளுக்கு ஏற்கெனவே இருந்த வட்டி விகிதங்கள் தற்போது 0.5% குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, இதற்கு முன் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுக்கு 4% வட்டி வழங்கி வந்தது உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி. இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுக்கு 3.50% வட்டி வழங்கப்படும்.

சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகபட்சமாக 7% வட்டி வழங்குகிறது உஜ்ஜீவன் வங்கி. தற்போதைய நிலையில் 7% வட்டி என்பது ஒரு டீசண்டான விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு வட்டி குறைப்பு.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!
புதிய வட்டி விகிதம்:

1 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் - 3.50%

1 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் - 7%

25 லட்சம் ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட் - 6%

10 கோடி ரூபாய்க்கு மேல் - 6.75%

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி மட்டுமல்லாமல் இந்தியன் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஆர்பிஎல் வங்கி ஆகிய வங்கிகளும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சேமிப்புக் கணக்குக்கு வட்டி விகிதத்தை மாற்றியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்