ஆப்நகரம்

வங்கிகளில் பெறப்படாமல் கிடந்த ரூ.35,000 கோடி.. இறந்தவர்களின் பணம் இப்போ எங்க இருக்கு தெரியுமா?

பொதுத்துறை வங்கிகளில் பெறப்படாமல் இருந்த 35000 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Apr 2023, 2:13 pm
வங்கிகளில் இருந்து எடுக்கப்படாமல் இருந்த 35,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil cash
cash


வங்கிகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணம் தேங்கி கிடக்கின்றன. இந்த வங்கி கணக்குகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் இறந்துவிட்டால் இவ்வகையில் பணம் தேங்கி கிடப்பதுண்டு.

இந்நிலையில், 2023 பிப்ரவரி மாதம் வரையில், பொதுத்துறை வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் கிடந்த கணக்குகளில் இருந்து 35,012 கோடி ரூபாய் தொகை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளாக செயலற்று கிடந்த சுமார் 10.24 கோடி வங்கி கணக்குகளில் இருந்து இந்த 35,012 கோடி ரூபாய் தொகை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிக் அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியில் இருந்து 8,086 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருது 5340 கோடி ரூபாய், கனரா வங்கியில் இருந்து 4558 கோடி ரூபாய், பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து 3,904 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் பணத்தை அவர்களின் குடும்பத்தினர், வாரிசுகளுக்கு வழங்குவதற்கு எல்லா விதமான உதவிகளையும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வழங்கி வருவதாக நாடாளுமன்றத்தில் நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

இதற்கான உத்தரவுகளும் தொடர்ந்து வங்கிகளுக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபோக, செயலற்று கிடக்கும் வங்கி கணக்குகளின் உரிமையாளர்கள், அவர்களது குடும்பத்தினர், வாரிசுகளை தேடி கண்டறியவும் வங்கிகள் சிறப்பு முகாம்களை நடத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்