ஆப்நகரம்

இந்தியாவை விரட்டும் வேலையில்லா திண்டாட்டம்!

கொரோனா பிரச்சினைக்கு பிறகு இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2021, 5:22 pm
இந்திய மாநிலங்களில் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக காஷ்மீரில் வேலையின்மை விகிதம் 21.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. தேசியத் தலைநகர் டெல்லியில் வேலையின்மை விகிதம் 16.8 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேலையின்மைப் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. அதில் 8 மாநிலங்கள் இரட்டை இலக்க வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளன.
Samayam Tamil unemployment


ராஜஸ்தானில் 17.9 சதவீதமாகவும், ஜம்மு காஷ்மீரில் 21.6 சதவீதமாகவும், பீகரில் 10 சதவீதமாகவும், திரிபுராஅவில் 15.3 சதவீதமாகவும், ஜார்கண்டில் 13.5 சதவீதமாகவும், புதுச்சேரியில் 11.2 சதவீதமாகவும், ஹரியானாவில் 20.3 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் பதிவாகியுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரையில், கடந்த மூன்று மாதங்களில் 8.8 %, 10.7 %, 11.6 % என தொடர்ச்சியான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஆகஸ்ட் மாதத்தில் 6.3 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் செப்டம்பர் மாதத்தில் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, இமாசலப் பிரதேசத்தில் 8.7 சதவீதமாகவும், பஞ்சாபில் 9.3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 35.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 20.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வேலையின்மைப் பிரச்சினை ஒரு வழியா குறைஞ்சிருச்சு!
வேலையில்லா திண்டாட்டம் என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் பிரச்சினை உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நாட்டில் போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. அதுவும் கொரோனா வந்த பிறகு நிறையப் பேர் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்