ஆப்நகரம்

பட்ஜெட் 2022: நீங்களும் அரசுக்கு ஐடியா கொடுக்கலாம்.. எப்படி?

பட்ஜெட் அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பது எப்படி?

Samayam Tamil 26 Dec 2021, 9:19 pm
2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் நிதியமைச்சகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் அறிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Union Budget


பொதுமக்கள் தங்கள் கருத்துகளை MyGov.in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். பட்ஜெட் அறிக்கை தயார் செய்வதை அனைவரும் பங்குபெறும் வகையிலும், ஜனநாயக ரீதியாகவும் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயார் செய்ய பொதுமக்களின் கருத்துகளை நிதியமைச்சகம் கேட்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவிக்க முதலில் MyGov.in இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வருமான வரித் தாக்கல்.. தேவையான முக்கிய ஆவணங்கள்!
பின்னர் அதே இணையதளத்தில் கருத்துகளையும் தெரிவிக்கலாம். பட்ஜெட் தொடர்பான கருத்துகள், பரிந்துரைகளை வழங்கும்படி பொதுமக்களிடம் நிதியமைச்சகம் இன்று கேட்டுக்கொண்டுள்ளது. கருத்து தெரிவிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 7.

* முதலில் MyGov.in இணையதளத்துக்கு செல்லவும்

* அதில் உங்கள் பெயர், மாநிலம், இமெயில் ஐடி, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.

* எந்த விதமான கருத்தை தெரிவிக்க வேண்டுமென்பதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக வரி அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்தை தேர்வு செய்ய வேண்டும்.

* இப்போது உங்களது கருத்தை பதிவு செய்யவும்.

* Submit பட்டனை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்