ஆப்நகரம்

Hindustan Zinc: மொத்த பங்குகளும் விற்பனை.. மத்திய அரசு முடிவு!

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மீதமுள்ள பங்குகளை விற்பனை செய்ய மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 25 May 2022, 5:44 pm
ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் ஒட்டுமொத்த பங்குகளையும் விற்பனை செய்வதற்கு கேபினட் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று தகவல் வெளியானது. இதையடுத்து ஹிந்துஸ்தான் ஹிங்க் நிறுவனத்தின் பங்கு விலை இன்று 7% உயர்ந்தது.
Samayam Tamil Hindustan Zinc


ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிட்டெட் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள மொத்த பங்குகளையும் விற்பனை செய்வதற்கு மத்திய கேபினட் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் 2002ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.

2002ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் 26% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தது. இந்த 26% பங்குகளை வேதாந்தா குழுமம் (Vedanta Group) வாங்கிக்கொண்டது. பின்னர் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பங்குகளை வாங்கிக்கொண்டது.

உங்களோட அட்வைஸ் தேவையில்லை.. எகிறி அடித்த பிடிஆர்
தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 64.92% பங்குகள் உள்ளது. மத்திய அரசுக்கு தற்போது 29.5% பங்கு உள்ளது. ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் அரசுக்கு மீதமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு மீதமுள்ள 29.5% பங்குகளையும் விற்பனை செய்வதற்கு மத்திய கேபினட் இன்று அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 29.5% பங்குகளின் மதிப்பு 39,385.66 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்