ஆப்நகரம்

பொருளாதார வளர்ச்சி.. நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 May 2022, 3:57 pm
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பிரச்சினை வந்த பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சூடிபிடித்து வளர்ச்சி ஆரம்பமானது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை வெளியிட்டு வருகின்றன.
Samayam Tamil nirmala


இந்நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூ டெவலப்மெண்ட் பேங்க் வங்கியின் 7ஆவது வருடாந்திர கூட்டத்தில் அவர் பேசுகையில், நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியா 8.9 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல, அடுத்து வரும் 2023-24 நிதியாண்டில் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தது. அதில், 2022ஆம் ஆண்டில் இந்தியா 6.4 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும், இந்த ஆண்டில் அதி வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இந்தியாதான் முன்னிலையில் இருக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா பாதிப்பில் இந்தியா சந்தித்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்