ஆப்நகரம்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு.. பயனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

குறிப்பிட்ட மூன்று சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 30 Sep 2022, 11:59 am
சிறு, சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். எனினும், தொடர்ந்து பல காலாண்டுகளாக வட்டி விகிதம் மாற்றப்படாமலேயே இருந்தது. அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்தப்படும்.
Samayam Tamil small savings schemes


இந்நிலையில், வரும் அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கான (Senior Citizen Saving Scheme) வட்டி விகிதம் 0.20% உயர்த்தப்பட்டு 7.6% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கிசான் விகாஸ் பத்திரத்துக்கான (Kisan Vikas Patra) வட்டி விகிதம் 0.10% உயர்த்தப்பட்டு 7% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடன் EMI கட்டுவோருக்கு கூடுதல் தலைவலி.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பேரதிர்ச்சி!
3 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் 5.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் 5.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இத்திட்டங்களுக்கு கடைசியாக 2018ஆம் ஆண்டில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்