ஆப்நகரம்

வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்கக்கூடாது.. மத்திய அரசு உத்தரவு!

வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்களை கேட்கக்கூடாது என சில்லறை விற்பனை ஸ்டோர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 24 May 2023, 4:19 pm
வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்போது பில் பெறுகையில் வாடிக்கையாளரின் மொபைல் எண் கேட்கும் வழக்கம் பரவலாகவே உள்ளது. பெரும்பாலும் சூப்பர்மார்க்கெட்டுகள் போன்ற சில்லறை வர்த்தக ஸ்டோர்களிலேயே இந்த நடைமுறை பரவலாக இருக்கிறது.
Samayam Tamil retail
retail


ஆனால், இந்தியாவில் பொருட்களை வாங்கிவிட்டு பில் பெறுவதற்கு மொபைல் எண் கொடுக்க வேண்டும் என எந்தவொரு கட்டாயமும் இல்லை. ஆனாலும் பொதுவாக சூப்பர்மார்க்கெட்டுகளில் வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்கும் வழக்கம் இருக்கிறது. அசவுகரியத்துடன் வாடிக்கையாளர்களும் மொபைல் எண் கொடுத்து பில் பெற்றுக்கொள்வார்கள்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில்லறை வர்த்தகர்கள் மற்றும் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்கக்கூடாது என மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சூப்பர்மார்க்கெட்டுகள் போன்ற ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக மொபைல் எண் கேட்கப்படுவதாகவும், மொபைல் எண் கொடுக்காவிட்டால் பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்துள்ளதாக நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி இது நியாயமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக முறை எனவும், வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்பதில் எந்தவொரு பகுத்தறிவும் இல்லை எனவும் ரோகித் சிங் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மொபைல் எண் கேட்பதில் தனியுரிமை பிரச்சினை இருப்பதாகவு அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வாடிக்கையாளர்களின் நலன் கருதி இனி மொபைல் எண்களை கேட்கக்கூடாது என அறிவுறுத்தி, இந்த பிரச்சினையை தீர்க்கும்படி சில்லறை வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக ரோகித் சிங் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்