ஆப்நகரம்

மீன் வளர்ப்பு தொழில்.. மத்திய அரசு திட்டம்.. புதிய வசதி அறிமுகம்!

மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு திட்டமான பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனாவுக்கு புதிய டாஷ்போர்டு அறிமுகம்.

Samayam Tamil 9 Jun 2022, 6:46 pm
நாட்டின் மீன் வளர்ப்பு தொழிலை வளர்த்தெடுப்பதற்காக 2020ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மீன் வளர்ப்பு தொழிலில் இறங்க விரும்புவோர் இத்திட்டத்தை பயன்படுத்தி பலன்பெறலாம்.
Samayam Tamil fisheries


பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டு முதல் 2024-25ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 20,050 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டில் இப்போது வரை 7,242.90 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமர் மத்ஸ்ய சம்பாதா யோஜனா திட்டத்தில் 2020-22 காலத்தில் இந்நாள் வரை ஒட்டுமொத்த்மாக 7,242.90 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

நகை கடன் முழுமையாக தள்ளுபடி.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
இந்நிலையில், பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்துக்கான டாஷ்போர்டு (dashboard) இன்று அறிமுகப்பட்டுள்ளது. இந்த டாஷ்போர்டை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அறிமுகப்படுத்திவைத்தார். இந்த டாஷ்போர்டு வாயிலாக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா தொடர்பான எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், மாநிலங்களில் திட்டத்தின் வளர்ச்சியை கவனிக்கவும் இந்த டாஷ்போர்டு உதவுகிறது. மேலும், தவல்களின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் இந்த டாஷ்போர்டு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்