ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன் சலுகைகள் மீண்டும் கிடைக்குமா? மத்திய அரசு தடாலடி பதில்!

சீனியர் சிட்டிசன்களுக்கான ரயில் டிக்கெட் சலுகைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 8 Dec 2022, 6:18 pm
ரயில்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், 2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது சீனியர் சிட்டிசன்களுக்கான ரயில் பயண சலுகைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிவிட்டது.
Samayam Tamil senior citizen
senior citizen


இருப்பினும், சீனியர் சிட்டிசன்களுக்கான ரயில் பயண சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. சீனியர் சிட்டிசன்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என ஏற்கெனவே ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், சீனியர் சிட்டிசன்களுக்கான சலுகைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு மத்திய அரசும் பதில் அளித்துள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழு ஆகஸ்ட் 4ஆம் தேதி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் மூன்றாம் ஏசி வகுப்புகளில் மட்டும் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகளை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரசு அளித்துள்ள பதிலில், ஸ்லீப்பர் வகுப்பிலும், 3ஆம் ஏசி வகுப்பிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகளை வழங்கும்படி நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஓய்வூதியதாரர்கள் முதலிடம்.. மத்திய அரசு வெளியிட்ட சர்பிரைஸ் தகவல்!
கொரோனா பாதிப்பு குறைந்த பின்பும் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏன் சலுகைகள் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரசு அளித்துள்ள பதிலில், “2019-20ஆம் ஆண்டில் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளுக்கு அரசு 59,837 கோடி ரூபாய் மானியத்தை அரசு வழங்கியுள்ளது. ரயில்களில் பயணிக்கும் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக 53% சலுகை கிடைக்கிறது. அனைத்து பயணிகளுக்கும் இந்த மானியம் தொடர்ந்து கிடைக்கிறது. இதுபோக மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகளுக்கு தொடர்ந்து சலுகைகள் வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.

மேலும், சீனியர் சிட்டிசன்களுக்கான வயது வரம்பு 60ல் இருந்து 70ஆக உயர்த்தப்படவில்லை எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதுபோக, விமானங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்