ஆப்நகரம்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. இறங்கும் எண்ணெய் விலை!

சமையல் எண்ணெய் விலை (Cooking Oil Price) இறங்கத் தொடங்கிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 11:46 am
உக்ரைன் - ரஷ்யா போர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு, ஏற்றுமதி தடை போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது.
Samayam Tamil cooking oil


இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். இந்நிலையில், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவிலும் விலை குறையத் தொடங்கிவிட்டதாக மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள விவரங்களின்படி, சமையல் எண்ணெய்களின் சராசரி சில்லறை விலை குறையத் தொடங்கியுள்ளது. எனினும், கடலெண்ணெய் விலை மட்டும் குறையாமல் இன்னும் கிலோவுக்கு 150 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

டீ விலை ரூ.1 லட்சம்.. அப்படி இதில் என்ன ஸ்பெஷல்?
அதானி வில்மர், மதர் டய்ரி போன்ற சில மட்டும் கடந்த வாரம் சமையல் எண்ணெய்களின் விலையை லிட்டருக்கு 10 முதல் 15 ரூபாய் வரை குறைத்துள்ளன. விலை குறைக்கப்பட்ட எண்ணெய்கள் விரைவில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

சமையல் எண்ணெய் மட்டுமல்லாமல் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலையும் உயராமல் நிலையாக உள்ளதாக உணவுத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்