ஆப்நகரம்

Pension: ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி.. மத்திய அரசு சூப்பர் திட்டம்!

ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) புதிய வசதியை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு.

Samayam Tamil 21 Jun 2022, 6:37 pm
ஓய்வூதியதாரர்கள் எளிதாக பென்சன் பெறவும், பென்சன் செயல்முறைகளை எளிதாக்குவதற்கும் புதிய ஒருங்கிணைந்த பென்சன் இணையதளத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கியுடன் மத்திய அரசு கூட்டணி அமைத்துள்ளது.
Samayam Tamil union government to collaborate with state bank of india to launch integrated pension portal
Pension: ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி.. மத்திய அரசு சூப்பர் திட்டம்!


​ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வு

ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் கொள்கை சீர்திருத்தங்கள், பென்சன் வழங்குவதை டிஜிட்டல்மயமாக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எஸ்பிஐ வங்கி சார்பில் இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

​ஒருங்கிணைந்த பென்சன் இணையதளம்

தற்போது ஓய்வூதியதாரர்களுக்காக பல்வேறு இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களை இணைத்து ஒருங்கிணைந்த பென்சன் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

​புதிய தொழில்நுட்பம்

ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital Life Certificate) சமர்ப்பிப்பதற்கு முகம் சரிபார்ப்பு தொழில்நுட்பம் (Face Authentication Technology) அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பற்றி வங்கிகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

​ஓய்வூதியதாரர்களின் வாழ்வு எளிதாகும்

மேற்கூறிய திட்டங்களால் ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிதாக்குவதே நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

​வங்கிகள் விழிப்புணர்வு

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வங்கிகள் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்