ஆப்நகரம்

எத்தனாலுக்கு ஜிஎஸ்டி குறைப்பு.. அரசு திடீர் அறிவிப்பு!

எத்தனாலுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 Dec 2021, 7:27 pm
பெட்ரோலுடன் கலக்கப்படு எத்தனாலுக்கான (Ethanol) ஜிஎஸ்டி வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலந்து பயன்படுத்துவதற்ஆன திட்டத்தில் பயன்படுத்தப்படும் எத்தனாலுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ethanol


எத்தனால் கலப்பை ஊக்குவிப்பதற்காக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தேலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்துக்கு பயன்படும் எத்தனாலுக்கு ஜிஎஸ்டி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

கரும்புகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கழிவுகளில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எத்தனாலுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. பெட்ரோல் டீசல் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடகடவென உயர்ந்த தங்கம் விலை.. காரணம் இதுதான்!
இதன் ஒரு பகுதியாக எத்தனால் கலந்த பெட்ரோலை ஊக்குவிக்க எத்தனாலுக்கு ஜிஎஸ்டி வரியை அரசு குறைத்துள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் 10% எத்தனால் கலந்த பெட்ரோலை எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்