ஆப்நகரம்

ESIC: எல்லா மாவட்டங்களிலும் சேவை.. தமிழகத்துக்கு 2 மருத்துவமனைகள்!

நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Jun 2022, 3:28 pm
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனம் (ESIC) நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் சேவை வழங்கி வருகிறது. இது தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். தற்போது 443 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.
Samayam Tamil ESIC


153 மாவட்டங்களில் பாகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ளது; 148 மாவட்டங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் வசதியே கிடையாது. இந்நிலையில், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் 188ஆவது கூட்டம் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள 153 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பர் திட்டம்.. மாதம் தோறும் வருமானம் கிடைக்கும்!
2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதிய கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சேவை வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், 100 படுக்கை வசதி கொண்ட 23 புதிய மருத்துவமனைகளை நாடு முழுவதும் அமைப்பதற்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டு மருத்துவமனைகள் அமையவிருக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்