ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முக்கிய முடிவு.

Samayam Tamil 18 Jan 2022, 6:38 pm
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஜாக்பாட் அறிவிப்பு விரைவில் வெளியாகக் காத்திருக்கிறது. அதாவது, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான fitment factorஐ உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil cash


fitment factor உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயரும். அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டுமென்பது மத்திய அரசு ஊழியர்களின் பல நாள் கோரிக்கையாகும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 18000 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் fitment factor உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் 26000 ரூபாயாக உயரும் என்பதால் மத்திய அரசு ஊழியகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

பேங்க் லாக்கர் கட்டணம்.. கம்மி ரேட் எங்கு கிடைக்கும்?
அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, விரைவில் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுகுறித்தும் அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் என்றே கூறலாம். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31% ஆக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்