ஆப்நகரம்

பென்சன் உயர்வு.. நிலுவைத்தொகை செட்டில்மெண்ட்.. ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 4:55 pm
அக்னிபாத் திட்டத்துக்கு ஒரு பக்கம் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஒரே பதவி ஒரே பென்சன் (One Rank, One Pension) திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
Samayam Tamil union govt prepares for pension arrears settlement for defence pensioners under orop policy
பென்சன் உயர்வு.. நிலுவைத்தொகை செட்டில்மெண்ட்.. ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!


பென்சன் நிலுவைத் தொகை

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வூதியதாரரளுக்கு வழங்க வேண்டிய பென்சன் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்காக கூடுதலாக 2000 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு வழங்கவுள்ளது.

​நிலுவைத் தொகை எப்போது வரும்

அடுத்த சில வாரங்களில் ராணுவ ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் நிலுவைத்தொகை செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

​தாமதம் ஏன்?

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்துக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பென்சன் தொகை உயர்வு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

உச்ச நீதிமன்றம் அனுமதி

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பென்சன் தொகையை உயர்த்தும் அரசின் முடிவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

​விரைவில் நிலுவைத் தொகை

இதையடுத்து மத்திய அரசு பென்சன் தொகையை உயர்த்தி நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியதாரர்களுக்கு மிக விரைவில் செலுத்தவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

​அக்னிபாத் திட்டம்

ராணுவத்துக்கு ஆள் எடுப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

​அக்னிபாத் - பென்சன் கிடையாது

அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவத்தில் வேலை. பின்னர் கட்டாய பணி ஓய்வு பெற வேண்டும். அவர்களுக்கு பென்சனும் கிடையாது. இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் பென்சன் நிலுவைத் தொகையை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்