ஆப்நகரம்

சேவைக் கட்டணம் கட்டாயமில்லை.. உணவகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

உணவகங்களில் சேவைக் கட்டணம் செலுத்துவது கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 May 2022, 1:10 pm
பல நடுத்தர மற்றும் உயர் ரக உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் (Service Charge) வசூலித்து வருகின்றன. சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளர் தாமாக விரும்பி கொடுப்பதே தவிர கட்டாயமில்லை என்பது அரசின் விதிமுறை.
Samayam Tamil service charge


இந்நிலையில், பல்வேறு உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புகாரளித்து வருகின்றனர். அதிலும் சில உணவகங்கள் மிக அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உணவகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆலோசிப்பதற்காக தேசிய உணவகங்கள் சங்கத்துடன் ஜூன் 2ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Bank Holidays: வங்கிகளுக்கு 4 நாள் லீவு.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்!
சேவைக் கட்டணத்தை பொறுத்தவரை அரசின் விதிமுறை என்ன சொல்கிறது?

  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சேவைக் கட்டணத்தை தாமாக முன்வந்து செலுத்தலாமே தவிர, சேவைக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டியதில்லை.

  • உணவகத்தில் மெனுவில் உள்ள விலை மற்றும் உரிய வரிகளை மட்டுமே வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். மற்ற கட்டணங்களை கட்டாயமாக வசூலிப்பது சட்டப்படி நியாயமற்ற வணிக முறையாக கருதப்படும்.

  • இதுபோக உணவகத்தில் ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதும் வாடிக்கையாளர் தாமாக முன்வந்து வழங்குவது மட்டுமே. மேலும், டிப்ஸ் என்பது பில் கட்டணம் சாராத வேறு பரிவர்த்தனையாக எடுத்துக்கொள்ளப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்