ஆப்நகரம்

NHAI InvIT Bonds: ரூ.10,000 இருந்தால் போதும்.. சம்பளதாரர்களுக்கு நிலையான வருமானம்.. ஓய்வூதியதாரர்களுக்கும் அருமையான திட்டம்!

10,000 ரூபாய் முதலீட்டிலேயே 8.50% நிலையான வட்டி வருமானம் தரும் தேசிய நெடுஞ்சாலை துறை பத்திரங்கள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 Feb 2023, 12:18 pm
தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு அறக்கட்டளை பத்திரங்களை (NHAI InvIT Bonds) ஒவ்வொரு 15 நாட்களுக்கும் விற்பனை செய்வதற்கும், 8.50% வரை வட்டி வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil union minister nitin gadkari says salaried persons and pensioners can benefit from high interest rate of nhai invit bonds
NHAI InvIT Bonds: ரூ.10,000 இருந்தால் போதும்.. சம்பளதாரர்களுக்கு நிலையான வருமானம்.. ஓய்வூதியதாரர்களுக்கும் அருமையான திட்டம்!


NHAI InvIT பத்திரங்கள்

Business Today ஊடகம் நடத்திய நிகழ்வு ஒன்றில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று உரையாற்றினார். இதில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து கலந்துரையாடப்பட்டது.



இந்த உரையாடலின்போது, NHAI InvIT பத்திரங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை விற்பனை செய்வதற்கும், 8.50% வரை வட்டி வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், பங்குச் சந்தையில் InvIT மாடலில் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தையில் அறிமுகம்

இதுகுறித்து அவர் பேசியபோது, “ஒன்றரை மாதத்துக்கு முன், மும்பை பங்குச் சந்தையில் InvIT மாடலில் பத்திரங்களை அறிமுகம் செய்தோம். இந்த பத்திரங்கள் 10 நாட்களுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால் முதல் நாளிலேயே 7 மடங்கு oversubscribe ஆகிவிட்டது”

அதிக வட்டி

“இப்போது இந்த பத்திரத்தில் ஆண்டுக்கு 8.50% வட்டி வழங்கப்படுகிறது. இந்த பத்திரத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்தாலும் மாதம் தோறும் முதலீட்டாளர்களின் கணக்கில் வட்டி பணத்தை செலுத்திவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்லது

ஃபிக்சட் டெபாசிட்டில் வட்டி வருமானம் குறைந்துவிட்டதால் சம்பளதாரர்கள், மிடில் கிளாஸ் மக்கள், ஓய்வூதியதாரர்கள் NHAI InvIT பத்திரங்களில் முதலீடு செய்து அதிக வட்டி வருமானம் பெறலாம் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதிக ரேட்டிங்

NHAI InvIT பத்திரங்கள் AAA ரேட்டிங் பெற்றவை என்பதாலும், 8.50% வட்டி கிடைப்பதாலும் சம்பளதாரர்கள் முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்டலாம் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

NHAI நிதிநிலை

தேசிய நெடுஞ்சாலை துறையின் கடன்கள் குறைந்து வருவதாகவும், அதன் அடித்தளம் பலமாக உள்ளதாகவும், நெடுஞ்சாலை துறையின் சுங்க கட்டணம் வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என அரசு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்