ஆப்நகரம்

கோவை: திருப்பூர் ஜவுளித்துறையினருடன் பேச்சுவார்த்தை.. பியூஷ் கோயல் உறுதி!

கோவையில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சர்வதேச கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பார்வையிட்டார்.

Samayam Tamil 26 Jun 2022, 10:08 am
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் 'டெக்ஸ்ஃபேர் 2022' என்ற ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சர்வதேச கண்காட்சியினை மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Samayam Tamil piyush goyal


இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, மாநில உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்க்கு பின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சைமா ஜவுளி கண்காட்சியில் சர்வதேச அளவிலான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுள்ளது. ஜவுளித்துறை சார்ந்த விஷயங்களை திருப்பூர் தொழில் துறையினருடன் கலந்துறையாட உள்ளேன்.

கூட்டுறவு வங்கிகளில் வீட்டு கடன்.. ரிசர்வ் பேங்க் உத்தரவால் ஹேப்பி!
ஏற்றுமதியில் மேக் இன் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு திட்டமிடப்படுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. புதிய பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் தொழில் துறையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். சர்வதேச தலைவர்களுடன் பிரதமரின் நட்புறவு காரணமாக வர்த்தகம் எளிதாகியுள்ளது. பருத்தி குறைந்த விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் என்டிசி ஆலைகள் லாபகரமாக இயங்காததே தொடர்ந்து செயல்படாததற்கு காரணமாக உள்ளது” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்