ஆப்நகரம்

Wheat Export Ban: கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. இந்தியாவுக்கு அமெரிக்கா அட்வைஸ்!

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 May 2022, 6:29 pm
ரஷ்யா - உக்ரைன் போர் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயம் உருவாகியுள்ளது. மேலும், பிரதான உணவு தானியமான கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil wheat


இந்தியாவில் கோதுமை ஒரு பிரதான உணவுப் பொருள். ஆனால், கோதுமை விலை அண்மையில் கணிசமாக உயர்ந்துவிட்டது. எனவே, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துவிட்டது.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தால் உணவு தட்டுப்பாடு அதிகரித்து நெருக்கடி மேலும் மோசமடையும் என மேற்கு நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்திய மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சீனா திடீர் ஆதரவு.. மேற்குலக நாடுகள் ஷாக்!
இதுகுறித்து ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியாவின் முடிவு பற்றிய தகவலை பார்த்தோம். ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால் உணவு தட்டுப்பாடு மேலும் மோசமடையும்.

எனவே, ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டாம் என அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்கிறோம். மற்ற நாடுகளின் கோரிக்கையை கேட்டறிந்து இந்தியா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததை தொடர்ந்து நேற்று சர்வதேச சந்தையில் கோதுமை விலை 6% உயர்ந்தது. குறிப்பாக, ஐரோப்பாவில் கோதுமை விலை ஒரு டன்னுக்கு 435 யூரோவாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்