ஆப்நகரம்

சீன மாணவர்களுக்கு கெடுபிடி.... விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 29 May 2020, 1:22 pm
அமெரிக்காவில் கல்வி பயிலும் சீனாவை சேர்ந்த பட்டதாரி மாணவர்களின் விசவை ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil அமெரிக்க விசா ரத்து


கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பிரச்சினை முற்றியுள்ளது. கொரோனா வைரஸை உலகம் முழுக்க சீனா பரப்பிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பு, அந்நாட்டு உயரதிகாரிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். சீன அரசும் அமெரிக்க தரப்புக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வார்த்தை போர் முற்றியுள்ளது.

மேலும், அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களை தணிக்கை செய்வதற்காக அமெரிக்க செனட்டில் சில நாட்களுக்கு முன்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களை தணிக்கை செய்வதற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், சீன நிறுவனங்களை குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கல்வி பயிலும் சீன பட்டதாரி மாணவர்களின் விசாவை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் சீன ராணுவத்துடன் தொடர்புடையவர்களாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தேகிக்கிறார். இவர்களது விசாவை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சுமார் 3,000 முதல் 5,000 சீன மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என தெரிகிறது. உளவு பார்த்தல், அறிவுசார் சொத்துரிமை திருட்டு போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடையக்கூடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்