ஆப்நகரம்

இந்த போன் இருக்கா? டேட்டா எல்லாமே இலவசம்!

ஜியோ பீச்சர் போன் வைத்திருப்பவர்கள் ஒரு ஆண்டுக்கு இலவச டேட்டா, அழைப்பு, எஸ்.எம்.எஸ். சேவைகளைப் பெறலாம்.

Samayam Tamil 14 Jul 2021, 6:02 pm
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 2016ஆம் ஆண்டில் தனது ஜியோ நெட்வொர்க் சேவையை தொடங்கி, இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். வாய்ஸ் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ் போன்ற அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அனைவரும் ஜியோவுக்கு மாறத் தொடங்கினர். சில காலம் கழித்து நெட்வொர்க் சேவைகளுக்கு ஜியோ கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய பின்னரும் அதன் சந்தாதார்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது.
Samayam Tamil jio


மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த கட்டணம் வசூலிப்பதாலும், அதிக சேவைகளை வழங்குவதாலும் ஜியோ முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது. அதாவது வாய்ஸ் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ். போன்ற சேவைகளை ஒரு ஆண்டுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெறலாம். இதற்கு வெறும் 749 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். முக்கியமான கண்டிசன் என்னவென்றால், ஜியோ பீச்சர் போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: எந்தத் தேதி? எவ்வளவு உயரும்?
749 ரூபாய் பிளானில் வாடிக்கையாளர்கள் எந்தவொரு நெட்வொர்க் இணைப்புக்கும் இலவசமாகப் பேசிக்கொள்ளலாம். அதேபோல, அதிவேக மொபைல் டேட்டா 24 ஜிபி வரையில் ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் 28 நாட்களுக்கு 50 எஸ்.எம்.எஸ். வீதம் ஒரு ஆண்டுக்கு இலவச எஸ்.எம்.எஸ். சேவையையும் பெறலாம். இந்த பீச்சர் போனில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப் போன்றவற்றையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்