ஆப்நகரம்

TCS: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 140 மில்லியன் டாலர் அபராதம்.. அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

டிசிஎஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை 140 மில்லியன் டாலராக குறைத்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 5 Jul 2022, 1:39 pm
டிசிஎஸ் (TCS) நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை 140 மில்லியன் டாலராக குறைத்து அமெரிக்காவில் விஸ்கான்சின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil tcs


2014ஆம் ஆண்டில் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் (Epic systems) நிறுவனம் டிசிஎஸ் தன்னிடம் இருந்து முக்கிய தகவல்களை திருடிவிட்டதாக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் எபிக் சிஸ்டம்ஸ் வழக்கும் தொடர்ந்தது.

ஆனால், டிசிஎஸ் நிறுவனம் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தவில்லை எனவும், அதனால் பயன்பெறவில்லை எனவும் வாதிட்டது. இவ்வழக்கில், டிசிஎஸ் நிறுவனம் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு 940 மில்லியன் டாலர் இழப்பீடு செலுத்த வேண்டும் என 2016ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது.

Service Charge: ஹோட்டலில் சேவைக் கட்டணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்?
இதை எதிர்த்து டிசிஎஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. பின்னர் 2017ஆம் ஆண்டில் இழப்பீட்டுத் தொகை 420 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது. இதையும் எதிர்த்து டிசிஎஸ் மேல்நிலை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இவ்வழக்கு விஸ்கான்சின் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசிஎஸ் நிறுவனம் 140 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என இழப்பீட்டுத் தொகையை மேலும் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்