ஆப்நகரம்

ஏடிஎம் கார்டை நீங்களே லாக் செய்யலாம்... சூப்பர் வசதி!

இனி உங்களது ஏடிஎம் கார்டை நீங்களே லாக் செய்யவும், ஓப்பன் செய்யவும் முடியும். ஆனால் இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

Samayam Tamil 30 Dec 2020, 7:27 pm
ஏடிஎம் கார்டு காணாமல் போனாலோ அல்லது திருடுபோனாலோ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முறைகேடான வகையில் ஏடிஎம் கார்டில் இருக்கும் பணத்தைத் திருடும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. எனவே வாடிக்கையாளர்களிடையே பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் புதிய வசதியை பஞ்சாப் நேஷனல் பேங்க் கொண்டுவந்துள்ளது. PNB one app என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டுகளை லாக் செய்து பாதுகாப்பாக வைக்கலாம்.
Samayam Tamil atm


இந்த வசதியில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டு மொபைல் மூலம் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும். உங்களது ஏடிஎம் கார்டை லாக் செய்யவும் ஓப்பன் செய்யவும் முடியும். இந்த செயலி மூலமாக டிடிஎஸ் அல்லது form 16 சான்றிதழையும் உருவாக்க முடியும். ஏடிஎம் கார்டுகளுக்கான PIN நம்பரையும் இதில் மாற்றலாம். கூடுதல் அம்சம் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் தங்களது குழந்தையின் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கணக்கையும் இதில் இணைக்க முடியும்.

பதிவு செய்வது எப்படி?

PNB one செயலியில் உள்நுழைந்தவுடன் new user என்ற வசதியை கிளிக் செய்யவும்.

அதில் உங்களது அக்கவுண்ட் நம்பர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவிட்டால் OTP எண் வரும்.
இந்த OTP எண்ணைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும்.

உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண் மற்றும் பான் எண்ணைப் பதிவிட வேண்டும்.

இப்போது நீங்கள் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கினால் நீங்கள் இந்த செயலியில் உங்களது கணக்கைப் பதிவுசெய்யலாம்.

உங்களது மொபைல் நம்பருக்கு லாகின் செய்வதற்கான செய்தி வந்து சேரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்