ஆப்நகரம்

சென்னை: காய்கறி விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய முழு விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...

Samayam Tamil 22 Oct 2020, 11:20 am
சென்னையில் இந்த மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. நேற்று தொடங்கிய விலையேற்றம் இன்றும் நீடிக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (அக்டோபர் 22) 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 30 ரூபாயாக இருந்தது.
Samayam Tamil vegetable price


பீன்ஸ் விலை நேற்று 45 ரூபாயிலிருந்து இன்று 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பீட்ரூட் விலை 40 ரூபாய்க்குச் சென்றுள்ளது. அவரைக்காய் விலை 35 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 25 ரூபாயாகவும் உள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.35
அவரைக்காய் - ரூ.35
பீன்ஸ் - ரூ.55
பீட்ரூட் - ரூ.40
பாகற்காய் - ரூ.30
கத்தரிக்காய் - ரூ.25
முட்டைகோஸ் - ரூ.28
குடை மிளகாய் - ரூ.50
கேரட் - ரூ.65
காளிபிளவர் - ரூ.30
சவுசவு - ரூ.12
தேங்காய் - ரூ.37
வெள்ளரிக்காய் - ரூ.10
முருங்கைக்காய் - ரூ.60
இஞ்சி - ரூ.100
பச்சை மிளகாய் - ரூ.30
கருணைக் கிழங்கு - ரூ.25
கோவைக்காய் - ரூ.22
வெண்டைக்காய் - ரூ.25
மாங்காய் - ரூ.50
நூக்கல் - ரூ.20
வெங்காயம் - ரூ.85
உருளைக் கிழங்கு - ரூ.45
முள்ளங்கி - ரூ.15
புடலங்காய் - ரூ.12
சுரைக்காய் - ரூ.20

அடுத்த செய்தி

டிரெண்டிங்