ஆப்நகரம்

வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் வீழ்ச்சி!

ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் வாகன உற்பத்தியும் விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2020, 9:07 pm
இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய வர்த்தக அமைச்சகம் அளித்துள்ள பதிலில், இந்தியாவில் 2019-20ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாடு முழுவதும் 72,13,045 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 14,86,594 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil production


வாகன விற்பனையைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 60,84,478 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெறும் 14,91,216 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் வாகன உற்பத்தியும், விற்பனையும் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பதை அரசின் இந்தப் புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 7,12,684லிருந்து 1,53,734 ஆகக் குறைந்துள்ளது. இது 78.4 சதவீத வீழ்ச்சியாகும்.

மிலிட்டரி கேண்டீனில் பொருட்கள் விற்பனை: அரசு விளக்கம்!

ஜூலை மாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்த வாகன விற்பனை எண்ணிக்கை ஒரு சதவீத வீழ்ச்சியுடன் 1,97,523 ஆக இருந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிககி 1,99,534 ஆக இருந்தது. ஜூலை மாதத்தில் வாகன விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை இது காட்டுகிறது. அதைத் தொடர்ந்த ஆகஸ்ட் மாதத்திலும் வாகன உற்பத்தியும் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்