ஆப்நகரம்

இங்கிலாந்து குடியுரிமை பெற்றார் விஜய் மல்லையா?

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

CNN 25 Apr 2016, 5:29 pm
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil vijay mallya becomes uk citizen
இங்கிலாந்து குடியுரிமை பெற்றார் விஜய் மல்லையா?


வங்கிகளில் வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாதது மற்றும் கறுப்புப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக, தொழிலதிபர் விஜய் மல்லையா, தேடப்பட்டு வருகிறார். லண்டனில் வசித்துவரும் அவருக்கு அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. இதையடுத்து, விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்படுவதாக, வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

மேலும், அவரை இந்தியா கொண்டுவர இண்டர்போல் உதவியும் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் மல்லையா ஏற்கனவே, இங்கிலாந்து குடியுரிமை பெற்றுவிட்டதாக, தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டின் வாக்காளர் பட்டியலிலும் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெற்றுள்ளதால், அவரை கைது செய்து, இந்தியா கொண்டுவருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்