ஆப்நகரம்

பல கோடிகளை இழந்த வோடஃபோன் நிறுவனம்!

வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு சென்ற காலாண்டில் ரூ.25,000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Aug 2020, 8:35 pm
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்தபோது டேட்டா, அழைப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்று அதிரடியாகக் களமிறங்கியது. அதனுடன் போட்டி போடும் வகையில் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், ஏர்செல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் தங்களது மொபைல் சேவைக் கட்டணங்களைக் குறைக்கத் தொடங்கின. ஜியோவுடன் போட்டி போட முடியாமல் இழப்பைச் சந்தித்த சில நிறுவனங்கள் சந்தையை விட்டே வெளியேறின. மற்ற நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்திக்கத் தொடங்கின.
Samayam Tamil vodafone idea


இப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி வரும் நிலையில், மற்ற நிறுவனங்கள் நஷ்டத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. அதுவும் கொரோனா வந்த பிறகு இழப்புகள் மேலும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை வோடஃபோன் - ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இக்காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.25,460 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.4,874 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தது.

இது என்னடா ஏர்டெலுக்கு வந்த சோதனை?

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் ஒழுங்குமுறைக் கட்டணமாக ரூ.19,440.5 கோடியை அரசுக்குச் செலுத்தியுள்ளது. இதனால்தான் கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது. வோடஃபோன் ஐடியாவின் செயல்பாட்டு வருவாய் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.10,659 கோடியாக இருந்துள்ளது. 2019ஆம் இதே காலகட்டத்தில் அதன் வருவாய் ரூ.11,269 கோடியாக இருந்தது. காலாண்டு அடிப்படையில் பார்த்தால் இந்நிறுவனத்துக்கு 9.3 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்