ஆப்நகரம்

டிஜிட்டல் வாக்காளர் அட்டை.. நாளை முதல் இது மாறப்போகுது!

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாளை முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இரண்டு கட்டங்களாக டிஜிட்டல் வாக்காளர் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jan 2021, 3:48 pm
நாளை (ஜனவரி 25) தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை e-EPIC (Electronic Electoral Photo Identity Card) திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிமுகப்படுத்த இருக்கிறது.
Samayam Tamil Voter ID


இதன்படி, வாக்காளர் அடையாளர் அட்டைகளை டிஜிட்டல்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன. இதற்குள் நாடு முழுவதும் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஸ் சிலிண்டர்: உங்களுக்கு பணம் வரலையா? அப்போ இதை செய்யுங்க!
இரண்டு கட்டங்களாக டிஜிட்டல் வாக்காளர் அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ஜனவரி 25 முதல் 31ஆம் தேதி வரை, வாக்காளர் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்தோருக்கும், Form-6இல் மொபைல் எண்ணை பதிவு செய்தோருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 1ஆம் தேதி முதல், e-EPIC எனப்படும் டிஜிட்டல் வாக்காளர் அட்டைக்கு பொது வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ன வடிவில் வழங்கப்படும்? PDF வடிவில் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டையை edit செய்யமுடியாது.

பஸ் டிக்கெட் செலவில் விமானத்தில் பறக்கலாம்.. சூப்பர் சலுகை!
இதில் பாதுகாப்புக்காக ஒரு QR Code இருக்கும். படம், சீரியல் எண் ஆகியவை இதில் இடம்பெறும். மொபைல் அல்லது கணினியில் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்