ஆப்நகரம்

புதுசா வீடு கட்ட திட்டம் இருக்கா? உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டலாம். வட்டி கம்மி... EMI தொகையும் குறைவுதான்.

Samayam Tamil 6 Apr 2022, 5:01 pm
அனைவருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும். என்ற அசை இருக்கும். நிறையப் பேருக்கு அதுதான் லட்சியம். ஆனால் லட்சக்கணக்கில் பணம் போட்டு வீடு கட்டுவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் இப்போது வீடு கட்டுவது மிகவும் எளிதாகிவிட்டது. வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் EMI, திருப்பிச் செலுத்தும் காலம் போன்ற வசதிகளும் உள்ளன.
Samayam Tamil home loan


வீட்டுக் கடன் வாங்க முடிவு செய்துவிட்டால் முதலில் எந்த வங்கியில் கடன் வாங்குவது என்று ஆலோசிக்க வேண்டும். ஏனெனில், பல்வேறு வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் வெவ்வேறு வகையில் உள்ளது. அதேபோல, திருப்பிச் செலுத்தும் காலம், செயல்பாட்டுக் கட்டணம் போன்ற விஷயங்களையும் பார்க்க வேண்டும்.

இந்திய வங்கிகளிலேயே பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில்தான் வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும். இந்த வங்கியில் நீங்கள் 6.4 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வாங்கலாம். ரூ.75 லட்சம் கடனை 20 ஆண்டு காலத்துக்கு வாங்கினால் நீங்கள் ரூ.55,477 EMI செலுத்த வேண்டியிருக்கும்.

வட்டியை உயர்த்திய இந்தியன் வங்கி.. புதிய ரேட் இதுதான்!

பஞ்சாப் & சிந்த் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூசிஓ பேங்க், இந்தியன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.5 சதவீதமாக இருக்கிறது. EMI தொகை ரூ.55,918.

கோடாக் மகிந்திரா வங்கியில் வீட்டுக் கடன் வட்டி 6.55 சதவீதமாகவும், EMI ரூ.56,139 ஆகவும் இருக்கிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 6.60 சதவீத வட்டியிலும், கனரா வங்கியில் 6.65 சதவீத வட்டியிலும் வீட்டுக் கடன் கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்