ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடித்துள்ளன.

TNN 5 Jul 2016, 6:06 pm
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடித்துள்ளன.
Samayam Tamil weak global cues india services pmi drag nifty below 8350
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு


இந்த வார இறுதியில், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை வெளியாக உள்ளது. இதனை எதிர்பார்த்து, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் மந்தநிலையில் காணப்பட்டது. முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடுகளை வெளியே எடுத்து, லாபத்தைப் பதிவு செய்ததால், சர்வதேச சந்தைகள் சரிவுடன் இருந்தன.

உள்நாட்டில் ஜூன் மாதத்திற்கான சேவைத்துறை பிஎம்ஐ குறியீடு வெளியிடப்பட்டது. அதில், கடந்த 7 மாதங்களின் குறைந்தபட்ச புள்ளிகளில் சேவைத்துறை பிஎம்ஐ உள்ளதாகவும், சேவைத்துறை சார்ந்த தொழில் பணிகள் மந்தநிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் முந்தைய நாள் உயர்வைப் பயன்படுத்தி, முன்னணி நிறுவனப் பங்குகளை விற்று, லாபத்தை பதிவு செய்தனர்.

இதனால், வர்த்தக தொடக்கம் முதல் இறுதி வரையிலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனே காணப்பட்டன. வாகனம், மின்சாரம், ரியல் எஸ்டேட், ஐ.டி., மற்றும் தொலைத்தொடர்புத் துறை பங்குகள் அதிகளவில் விலை சரிந்திருந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிந்து, 27,167 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 35 புள்ளிகள் குறைந்து, 8,336 புள்ளிகளாகவும் முடிந்தது. இதன்மூலமாக, கடந்த 6 நாட்களாக சந்தைகளில் காணப்பட்ட உயர்வு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்