ஆப்நகரம்

3-வது வாரமாக பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரிப்பு

அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு வாங்கும் ஆர்வம் அதிகரித்த காரணத்தால், கடந்த 14 முதல் 18ம் தேதி வரையான ஒரு வாரகாலத்தில், இந்திய பங்குச்சந்தைகள் 1% உயர்ந்து முடிந்துள்ளன.

TOI Contributor 20 Mar 2016, 6:08 pm
அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு வாங்கும் ஆர்வம் அதிகரித்த காரணத்தால், கடந்த 14 முதல் 18ம் தேதி வரையான ஒரு வாரகாலத்தில், இந்திய பங்குச்சந்தைகள் 1% உயர்ந்து முடிந்துள்ளன.
Samayam Tamil weekly review share markets continue on high note
3-வது வாரமாக பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரிப்பு


கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில், சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக, வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என, அறிவிக்கப்பட்டது. இதனால், சர்வதேச பங்கு வர்த்தகத்தில் முதலீடுகள் அதிகரித்து காணப்பட்டன.

உள்நாட்டிலும், மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்பார்த்து, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் பங்கேற்றனர். எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பம்,நுகர் பொருட்கள் துறை பங்குகளில், அதிக முதலீடு நடைபெற்றது.

வார அளவில், மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரித்து 24,952 புள்ளிகளாக முடிந்தது. கடந்த மூன்று வாரங்களில் சென்செக்ஸ் 1,798 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 7,604 புள்ளிகளாக நிலைத்தது. இது 1% உயர்வாகும். மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தின் ஒட்டுமொத்த மதிப்பு, ரூ.94,503 கோடியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்