ஆப்நகரம்

ஐபிஎல் போட்டியில் அகவிலைப்படி கேட்ட அரசு ஊழியர்கள்!

அகவிலைப்படி கோரிக்கையை ஐபிஎல் விளையாட்டு போட்டி வரை எடுத்துச்சென்ற மேற்கு வங்க அரசு ஊழியர்கள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 May 2023, 11:37 am
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டியின்போது அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை கேட்டு அரசு ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி நின்றனர்.
Samayam Tamil ipl - da
ipl - da




மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. கடந்த நூறு தினங்களுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை விடுவிக்க கோரி மேற்கு வங்க அரசு ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

மேற்கு வங்க அரசு ஊழியர்கள் தங்களது நூறாவது நாள் போராட்ட தினமான மே 6ஆம் தேதி கொல்கத்தாவில் பெருந்திரளாக பேரணி நடத்தினர். அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை கோருவது மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் எனவும் மேற்கு வங்க அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அகவிலைப்படி தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த திங்கள் கிழமை அன்று கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின்போது, பார்வையாளர்கள் பகுதியில் அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகையை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்கத்தா அணிக்கான ஜெர்சியை அணிந்திருந்தனர். அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை விடுவிப்பு மட்டுமல்லாமல் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் அவர்களது தகுதிக்கு ஏற்ப ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் பதாகைகளை ஏந்தி நின்றனர்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்