ஆப்நகரம்

புளூ ஆதார் கார்டு என்றால் என்ன? அதை எப்படி வாங்குவது?

புளூ ஆதார் கார்டு வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 4 May 2022, 11:24 am
இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு அவசியம். தனிநபர் அடையாள ஆவணமான இந்த ஆதார் கார்டு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம்.
Samayam Tamil blue aadhaar card


பிறந்த குழந்தைக்கும் ஆதார் உள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் கார்டுதான் ’புளூ ஆதார்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டில் நீல நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த புளூ ஆதார் கார்டு வழங்கப்படுகிறது.

குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) ஏற்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடனேயே ஆதார் எடுக்கும் வசதி உள்ளது.

குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அவசியம் தேவை. குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களும் தேவைப்படும்.

குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு முதலில் ஆதார் இணையப் பக்கத்தில் சென்று அப்பாயிண்ட்மெண்ட் பதிவுசெய்ய வேண்டும்.

https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற ஆதார் இணையப் பக்கத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அந்த விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், தந்தை அல்லது தாயின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் ஆதார் எடுப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடும்.

கடைசியாக, தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்ட நாளில் ஆதார் சேவை மையத்துக்குச் சென்று ஆதார் எடுக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்