ஆப்நகரம்

CIBIL Score: சிபில் ஸ்கோர் என்றால் என்ன? எப்படி அதிகரிப்பது?

சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? உங்களின் சிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி?

Samayam Tamil 4 Jul 2022, 4:09 pm
கடன் வாங்க முயற்சிப்பவர்கள் அடிக்கடி கேள்விப்படும் சொல் சிபில் ஸ்கோர் (CIBIL Score). பலருக்கும் இது புரியாத விஷயமாக இருக்கலாம். சிபில் ஸ்கோர் என்றால் என்ன? சிபில் ஸ்கோர் ஏன் முக்கியம்? சிபில் ஸ்கோரை பராமரிப்பது அல்லது உயர்த்துவது எப்படி?
Samayam Tamil CIBIL Score


சிபில் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண். ஆனால் உங்களின் கடன் வரலாற்றை மூன்று இலக்கத்தில் கூறிவிடும் இந்த சிபில் ஸ்கோர். உங்களின் நிதிப் பரிவர்த்தனைகள், கடன், கடனை திருப்பிச் செலுத்துதல், EMI ஆகியவற்றின் அடிப்படையில் சிபில் ஸ்கோர் தீர்மானிக்கப்படுகிறது.

சிபில் ஸ்கோர் - எவ்வளவு அதிகம்? எவ்வளவு குறைவு?

600க்கு கீழே : மிகவும் குறைவு

600 - 649 : குறைவு

650 - 699 : பரவாயில்லை

700 - 749 : நல்ல ஸ்கோர்

750 - 900 : மிகவும் நல்ல ஸ்கோர்

Bank Fraud: வங்கி மோசடிகளின் எண்ணிக்கை குறைவு.. 2022ல் எவ்வளவு?
சிபில் ஸ்கோரை எதெல்லாம் பாதிக்கிறது?

சிபில் ஸ்கோர் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், கடன் EMI தொகையை தாமதமாக செலுத்துவது, நிறைய கிரெடிட் கார்டு வைத்திருப்பது, கட்டணங்களை தாமதமாக செலுத்துவது ஆகிய காரணங்களால் சிபில் ஸ்கோர் அடிபடும்.

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது கடினமாகும். பெரும்பாலான வங்கிகள் கடன் விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவார்கள். அல்லது அதிக வட்டி விகிதத்துக்கு கடன் வழங்கப்படும்.

சிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி?

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை குறைவாக வைத்திருப்பது, உரிய நேரத்தில் EMI செலுத்துவது, நிறைய கடன்கள் வாங்காதிருப்பது, பெர்சனல் கடன் அதிகம் வாங்குவதை தவிர்ப்பது, கடன்களுக்கு நிறைய விண்ணப்பிக்காமல் இருப்பது போன்றவற்றால் சிபில் ஸ்கோரை உயர்த்த முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்