ஆப்நகரம்

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்.. நீங்களும் ஈசியா கடன் வாங்கலாம்!

சுய தொழில் செய்வதற்கு மத்திய அரசே கடன் கொடுக்கிறது. அதை எப்படி வாங்குவது என்று இங்கே பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Samayam Tamil 17 Aug 2022, 4:38 pm
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை 2015ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Samayam Tamil mudra


வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.

சிஷு என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.

விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்காது. இந்தக் கடனுக்காக எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பணம் சம்பாதிக்க சூப்பர் வழி.. ரூ.54 லட்சம் கிடைக்கும்!
இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு அருகில் உள்ள வங்கிகளிலேயே விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் அடையாளச் சான்று, இருப்பிட சான்று, புகைப்படம், இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல நீங்கள் பயன்படுத்தலாம். இந்த அட்டை மூலமாக கடன் தொகையில் 10 சதவீதம், அதிகபட்சம் ரூ.10,000 வரை பயன்படுத்தலாம். இத்திட்டம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்