ஆப்நகரம்

வீடு வாங்க வேணாம்.. ஆனால் வீடு உங்களோடது.. வாடகையும் வரும்.. இப்படியும் முதலீடு செய்யலாம்!

ரெய்ட்ஸ் நிதியில் முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் சம்பாதிப்பது எப்படி?

Samayam Tamil 5 Apr 2022, 2:58 pm
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கலாம். ஆனால், ரியல் எஸ்டேட் என்பது நிலம், வீடு போன்ற சொத்துகள் தொடர்புடையது என்பதால் அனைவரும் நேரடியாக முதலீடு செய்து வருமானம் பார்ப்பது ஈசியல்ல.
Samayam Tamil realty


சரி அப்போது சாதாரண சிறு முதலீட்டாளர்களும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருமானம் சம்பாதிப்பது எப்படி? இதற்காகவே ரெய்ட்ஸ் நிதிகள் (REITs) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு ரெய்ட்ஸ் நிதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு செபி அனுமதியும் உள்ளது. ரெய்ட்ஸ் என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது? சுருக்கமாக சொன்னால், ரெய்ட்ஸ் என்பது ரியல் எஸ்டேட்டில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போன்றது. ஒரு மியூச்சுவல் ஃபண்டில் பல சிறு முதலீட்டாளர்கள் இணைந்து பணம் போடுகின்றோம். அந்த பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு லாபம் கிடைக்கிறது.

பிரச்சினையில் சிக்கிய ஸ்விகி, சொமேட்டோ.. விசாரணைக்கு உத்தரவு!
இதேபோல ரெய்ட்ஸ் நிதியில் பல சிறு முதலீட்டாளர்கள் சிறு சிறு தொகையாக முதலீடு செய்வார்கள். அந்த தொகையை வைத்து அலுவலக கட்டிடங்கள், ஷாப்பிங் மால், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவை கட்டமைக்கப்படும். பின்னர் அதில் இருந்து கிடைக்கும் வாடகைப் பணம் உங்கள் முதலீடுக்கு ஏற்ப பிரித்து தரப்படும்.

தேசிய பங்குச் சந்தை தகவல்படி ஆட்டோமொபைல், FMCG, நிதி போன்ற துறைகளை விட ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனவே, நீங்களும் சிறு சிறு தொகையாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டுமெனில் ரெய்ட்ஸ் நிதிகளில் ஈசியாக முதலீடு செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்