ஆப்நகரம்

வேலையை விட்டு வெளியேறும் பெண்கள் - காரணம் என்ன?

அலுவலகப் பணியிலிருந்து பெண்கள் அதிகமாக வெளியேறுவதன் காரணம் இதுதான்..

Samayam Tamil 21 Apr 2022, 11:45 am
தற்போதைய காலத்தில் ஆண்களுக்கு ஈடாக அனைத்து துறைகளிலும் பெண்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சொல்லப் போனால் நிறைய இடங்களில் பெண்கள்தான் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றனர். குடும்பத்தை மட்டுமல்லாமல், செய்யும் தொழிலையும் அவர்களைச் சார்ந்த ஊழியர்களையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று நிரூபித்துள்ளனர்.
Samayam Tamil job


இந்நிலையில், பெண் ஊழியர்கள் பற்றி அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பெண் ஊழியர்கள் பற்றி லிங்க்டுஇன் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சம்பளக் குறைப்பு, பாரபட்சம் மற்றும் நெகிழ்வுத்தன்மையின்மை போன்ற காரணங்களால் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற நினைக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

சுமார் 2,300 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். கொரோனா பிரச்சினைக்குப் பிறகு, பத்தில் எட்டு பெண்கள் அதாவது, 83 சதவீதத்தினர் பணிபுரியும் இடத்தில் தாங்கள் மிகவும் நெகிழ்வான முறையில் வேலை செய்ய விரும்புவதாக இந்த ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பணிபுரியும் பெண்களில் சுமார் 72 சதவீதத்தினர் வேலைவாய்ப்புகளை நிராகரிப்பதாகவும், 70 சதவீதத்தினர் ஏற்கனவே வேலையை விட்டு வெளியேறிவிட்டனர் அல்லது வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக வேலையை விட்டு வெளியேறுவதாக நிறையப் பேர் கூறியுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - மத்திய அரசு முக்கிய முடிவு?

கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 5 பேரில் இருவர், நெகிழ்வுத்தன்மை வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த உதவுகிறது என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் மூன்றில் ஒருவர் தங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவதாகவும், அதன் மூலம் வேலையில் தொடர முடியும் எனவும் கூறியுள்ளனர்.

பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக நடத்தப்படாமல் இருப்பது, மற்ற தொந்தரவுகள் போன்ற காரணங்களால் நிறைய பெண்கள் வேலையை விட்டு வெளியேறுவதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்