ஆப்நகரம்

மொபைல் ஆப்பில் பணம் அனுப்ப போறீங்களா? கொஞ்சம் இதை பாருங்க!

யூபிஐ பரிவர்த்தனையில் பயனாளர்களுக்கு உள்ள சந்தேகங்கள்...

Samayam Tamil 28 May 2022, 12:03 pm
இந்தியாவில் இப்போது வங்கிப் பரிவர்த்தனைகளை விட மொபைல் ஆப், ஆன்லைன் பரிவர்த்தனைகள்தான் அதிகமான அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. டீ குடிப்பது முதல் காய்கறி வாங்குவது வரை அன்றாட சிறு சிறு தேவைகளுக்குக் கூட டிஜிட்டல் முறையில் மக்கள் பணம் செலுத்துகின்றனர். கட்டணம் செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது, டிக்கெட் புக்கிங், ஷாப்பிங் போன்ற நிறைய விஷயங்களுக்கு மொபைல் ஆப் மூலமாகவே பணம் செலுத்தி விடுகின்றனர்.
Samayam Tamil pay


இதற்காகவே போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற நிறைய ஆப்கள் வந்துவிட்டன. இவற்றின் பயன்பாடு இப்போது அதிகமாக இருந்தாலும் நிறையப் பேருக்கு இதில் சில சந்தேகங்கள் உள்ளன. இதிலிருந்து பணத்தை இன்னொருவருக்கு அனுப்பும்போது பணம் அவர்களுக்கு போகாமல், வங்கிக் கணக்கிலிருந்து பிடிக்கப்பட்டுவிடும். அந்தப் பணம் காணாமல் போய்விடுமோ என்று அஞ்சுவார்கள். ஆனால் யூபிஐ பரிவர்த்தனைகளில் இந்த ஆபத்து இல்லை. வங்கிக் கணக்கிலிருந்து பிடிக்கப்பட்டாலும் அடுத்து இரண்டு மூன்று நாட்களிலேயே பணம் திரும்ப வந்துவிடும்.

2016ஆம் ஆண்டில் யூபிஐ பரிவர்த்தனைகள் அறிமுகம் ஆவதற்கு முன்னர் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் முறையில்தான் பணம் அனுப்ப முடிந்தது. அதில் பயனாளியின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை முன்கூட்டியே பதிவுசெய்து வைக்க வேண்டும். ஆனால், யூபிஐ முறையில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. உடனடியாக நொடிப் பொழுதில் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பி விடலாம்.

ரேஷன் கார்டுக்கு பெரிய ஆபத்து.. இனி ரேஷன் வாங்கவே முடியாது!

அதேபோல, ஒருவரின் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் அந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தாலே அந்த மொபைல் நம்பரை மட்டுமே கொடுத்து பணத்தை அனுப்பி விடலாம். யூபிஐ ஐடி தெரிந்தால் அதை வைத்தும் பணம் அனுப்பலாம். வங்கிக் கணக்கு IFSC code மூலமாகவும் பணம் அனுப்பலாம். யூபிஐ பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் பணம் அனுப்ப முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்