ஆப்நகரம்

பான் கார்டை ஆதாருடன் இணைக்கலயா? பெரிய ஆபத்து வருது!

ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

Samayam Tamil 14 Jun 2021, 3:02 pm
நாட்டு மக்கள் அனைவரும் தங்களது பான் கார்டை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஆதார் - பான் இணைப்புக்கான கால அவகாசத்தை மத்திய அரசு பல முறை நீட்டித்தது. கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதாரை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். கால அவகாசம் நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் பலர் இணைக்காமல் உள்ளனர். கால அவகாசத்தைத் தாண்டியும் இணைக்காமல் இருப்பவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
Samayam Tamil pan card


ரயில்வே தலையில் துண்டைப் போட்ட கொரோனா ஊரடங்கு!
வழங்கப்பட்ட தேதிக்குள் பான் கார்டை இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்துவிடும். 2021 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது முக்கியமான அறிவிப்பை ஒன்றை அரசு வெளியிட்டது. வருமான வரிச் சட்டம் 234H, 1961-இன் படி, ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும். ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் ரூ.1,000 வரையில் அபராதம் வசூலிக்கப்படும். பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் வேறு சில பிரச்சினைகளையும் மக்கள் சந்திக்க நேரிடும். அவை...

>> இருசக்கர வாகனம் அல்லாத மற்ற வாகனங்களை வாங்கவோ விற்கவோ முடியாது.

>> வங்கி நிறுவனம் அல்லது கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கு திறக்க இயலாது.

>> கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது.

>> ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்டில் ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பணம் செலுத்த முடியாது.

>> ரிசர்வ் வங்கியில் ரூ.50,000 ரூபாய்க்கு மேல் பத்திரங்கள் வாங்க முடியாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்