ஆப்நகரம்

இனி வாட்சப்பிலேயே பணம் அனுப்பலாம்? எப்படின்னு பாருங்க!

வாட்சப் பரிவர்த்தனை தளம் லைவாகியுள்ளது. வாட்சப்பில் எப்படி பணம் அனுப்புவது என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 20 Dec 2020, 1:37 pm

வாட்சப் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான திட்டம் இந்தியாவில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக நான்கு வங்கிகளுக்கு மட்டும் வாட்சப் பரிவர்த்தனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil whatsapp payment


எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் இனி வாட்சப் மூலம் பணம் அனுப்பிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், iOS என இரு வகை பயனர்களும் வாட்சப் பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியும்.

இன்னொரு பொங்கல் பரிசு: நேரடியா 2000 ரூபாய் வந்துடும்!

வாட்சப்பில் பணம் அனுப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

* முதலில் உங்கள் வாட்சப் எண்ணும், வங்கியில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும்.

* பிறகு வாட்சப் பரிவர்த்தனையில் உங்கள் கணக்கை இணைக்க வேண்டும்.

* உங்களுக்கு ஒரு PIN எண் வழங்கப்படும்.

* பின்னர் நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரை தேர்வு செய்ய வேண்டும். சாதாரணமாக மெசேஜ் அனுப்புவதைப் போல தேர்வு செய்ய வேண்டும்.

* போட்டோ, வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கிளிப் ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் பரிவர்த்தனை ஆப்ஷனும் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும்.

* அனுப்ப வேண்டிய தொகையை பதிவு செய்து PIN எண்ணை போட வேண்டும்.

* பணம் அனுப்பப்பட்டதும் Confirmation செய்தி வரும்.

இவ்வகையில் மிக அளிதாக வாட்சப்பில் பணம் அனுப்பிவிடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்