ஆப்நகரம்

2000 ரூபாய் எப்போது கிடைக்கும் தெரியுமா? தேதி இதுதான்!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 27 May 2023, 8:11 am
இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை பணத்தை மத்திய அரசு விரைவில் மாற்றவிருக்கிறது. அடுத்த மாதம் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வரவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் 14வது தவணைக்காக காத்திருக்கின்றனர். முன்னதாக, பிரதமர் மோடி பிப்ரவரி 26ஆம் தேதியன்று 13ஆவது தவணையை வெளியிட்டார். இதன் கீழ் சுமார் 16,800 கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.
Samayam Tamil pm kisan


அரசு தரப்பில் பெறப்பட்ட தகவல்களின்படி, ஜூன் மாதத்தில் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைக்கான பணத்தை மத்திய அரசு மாற்றலாம். இந்த முறை ஜூன் 23ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் ரூ. 2000 வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அரசு தரப்பில் இதற்கான அறிவிப்பு இன்னும் இல்லை.

பொதுவாக, 14ஆவது தவணைக்கான பணம் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மாற்றப்படும். இதற்கிடையில் மே 30 முதல் பாஜக மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை நடத்துகிறது. அதில் பிரதமர் மோடியும் உரையாற்றுவார். ஆனால் இந்த உரை எந்த தேதியில் நடைபெறும் என்பது தெரியவில்லை. அவர் பேசும்போது பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை எப்போது வழங்கப்படும் என்ற தகவலை அவர் வெளியிடலாம்.

பிஎம் கிசான் திட்டத்தில் உங்களது தவணைப் பணத்தில் நிலவரத்தை நீங்கள் சரிபார்க்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

>> தவணையின் நிலையைப் பார்க்க, நீங்கள் PM Kisan திட்டத்தின் இணையதளத்திற்குச் செல்லவும்.
>> இப்போது farmers corner ஆப்சனில் கிளிக் செய்யவும்.
>> அடுத்து Beneficiary Status விருப்பத்தை கிளிக் செய்யவும்.
>> இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் திறக்கும்.
>> இங்கே உங்கள் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிடவும்.
>> இதற்குப் பிறகு உங்கள் நிலையைப் பற்றிய முழுமையான தகவலை நீங்கள் அங்கே பெறுவீர்கள்.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் KYC சரிபார்ப்பு செய்வது அவசியம். அது எப்படி என்று பார்க்கலாம்.

பிஎம் கிசன் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். KYC ஆன்லைனில் செய்யப்பட வேண்டும் என்றால், பிஎம் கிசான் வெப்சைட்டிலேயே மொபைல் நம்பர் OTP அடிப்படையிலான சரிபார்ப்பை நீங்கள் முடிக்கலாம். அதோடு விவசாயிகள் பயோமெட்ரிக் அடிப்படையிலான KYC வசதியையும் பெறலாம். இதற்காக பொதுச் சேவை மையங்களுக்குச் சென்று KYC செய்யலாம். அவ்வாறு செய்தால் தான் பிஎம் கிசான் திட்டத்தின் 14ஆவது தவணைப் பணத்தை நீங்கள் பெற முடியும். உடனே முடிப்பது நல்லது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்