ஆப்நகரம்

வட்டி எல்லாம் கூடிப் போச்சு.. இனி எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நல்லது?

இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் டெட் மியூச்சுவல் ஃபண்டில் (Debt Mutual Fund) முதலீடு செய்யலாம்.

Samayam Tamil 6 Aug 2022, 12:42 pm
ரிசர்வ் வங்கியின் நாணயக் பணக் கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. இந்த கொள்கைக் கூட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5) வெளியிட்டார். அதில், ரெப்போ வட்டி விகிதம் 5.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil repo rate


ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். எனவே, ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

ஏற்கெனவே கடந்த மே மாதம் ரெப்போ வட்டி 4.40% ஆக உயர்த்தப்பட்டு பின்னர் ஜூன் மாதம் 4.90% ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரெப்போ வட்டி 5.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்துவதற்கே ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் டெட் ஃபண்ட் (Debt Mutual Fund) முதலீட்டு வகைகளை அதிகம் பாதிக்கும். ஏனெனில் டெட் ஃபண்டுகள் கடன் பத்திரங்களில் தான் 60% முதலீடுகளைக் கொண்டிருக்கும். அதனால் உங்கள் டெட் ஃபண்டுகள் மீதான வட்டி விகிதங்கள் அதிகரித்தால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.

ரெப்போ வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. இனி எல்லாமே உயரப் போகுது!
அதனால் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்களும் இந்த வட்டி விகித மாற்றங்களைச் சமாளிக்க டெட் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டிற்கு புதிதாக வரும் முதலீட்டாளர்களைக் குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துகின்றனர்.

அதே சமயம் சில நிதி ஆலோசகர்கள் டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் (Dynamic bond fund) முதலீடு செய்யவும் அறிவுறுத்துகின்றனர்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்