ஆப்நகரம்

தங்கமா, FD திட்டமா? எதில் முதலீடு செய்தால் லாபம்?

நல்ல லாபத்தை அள்ளித் தரும் சேமிப்புத் திட்டங்கள் பல இருந்தாலும் தங்கத்தின் மீதான முதலீட்டிலேயே அதிக லாபம் கிடைக்கிறது.

Samayam Tamil 22 Feb 2021, 9:12 pm
சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ளது. தங்கம் மீதான மோகம் இந்தியர்களுக்கு எப்போதுமே அதிகமாக இருக்கிறது. தங்கத்தை வைத்திருப்பது கௌரவமான விஷமாகவும் பார்க்கப்படுகிறது. இது மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாகவும் உள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தை வாங்கிப் போட்டால் பிற்காலத்தில் அல்லது அவசரமான நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா வந்த பிறகு தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் முக்கியத்துவத்தைப் பெரும்பாலானோர் புரிந்துகொண்டுள்ளனர்.
Samayam Tamil gold


சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்பு தீவிரமான இருந்த சமயத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகளுக்கு 28 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளது. அதேநேரம், சென்செக்ஸ் பங்கு வர்த்தகத்தில் 16 சதவீத லாபம் மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல, FD திட்டங்களில் 6 சதவீத ரிட்டன் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே FD திட்டங்களைக் காட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடுகள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கொரோனா காலத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டேதான் சென்றது. சர்வதேச அளவிலும் தங்கம் உற்பத்தி அதிகமாக இருந்தது.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் தங்கம் இறக்குமதியும் தங்கம் பயன்பாடும் குறைந்துபோனது. நாட்டு மக்களிடையே நிதி நெருக்கடி நிலவியதால் தங்கம் பயன்பாடு மந்தமாக இருந்தது. அதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதாலும், கொரோனா மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாலும் தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், பேடிஎம், போன் பே, போன்றவற்றின் வாயிலாகவும் தங்க முதலீட்டுத் திட்டங்களில் அதிகப் பேர் இணைந்து முதலீடு செய்கின்றனர்.

தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர்... இதை செய்தால் போதும்!!
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் மீதான முதலீடுகளில் 100 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளதாகவும், அடுத்து வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், FD திட்டங்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் 7 சதவீத ரிட்டன் மட்டுமே கிடைக்கிறது. எனவே தங்கத்தின் மீதான முதலீடுகளில் அதிகப்பேர் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்