ஆப்நகரம்

பணவீக்கப் பிரச்சினையில் இந்தியா! பெட்ரோல் விலை உயர்வால் வந்த வினை!

மே மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 15 Jun 2021, 2:04 pm
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 மே மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் மே மாதத்தில் 10.49 சதவீதமாக இருந்தது. அதேபோல, 2020 மே மாதத்தில் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 3.37 சதவீதமாக இருந்தது. மே மாதத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால்தான் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் அதிகளவில் உயர்ந்துள்ளது.
Samayam Tamil WPI


எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டும் சேர்த்து 37.61 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் இவற்றின் அளவு 20.94 சதவீதமாக இருந்தது. அதேபோல, உணவு விலைப் பணவீக்கம் 4.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 10.4 சதவீதம் முதல் 10.9 சதவீதம் வரையில் அதிகரிக்கும் எனவும், செப்டம்பர் மாதம் வரையில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் எனவும் இக்ரா நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கலயா? பெரிய ஆபத்து வருது!
ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை எவ்வித மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதேபோல, ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி இந்த முடிவை மேற்கொண்டிருந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசிக்கொண்டிருப்பதால் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்