ஆப்நகரம்

பெரும்பாலான மக்கள் இன்சூரன்ஸ் ஏன் எடுப்பதில்லை? காரணம் என்ன?

சுகாதார காப்பீடு முக்கியம் என்று தெரிந்தும் ஏன் பெரும்பாலான இந்தியர்கள் காப்பீடு எடுப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 14 Apr 2024, 5:32 pm
இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது. நேற்று நம்முடன் பேசிக் கொண்டிருந்தவர் இன்று இல்லாமல் போகலாம். எனவே காப்பீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காப்பீடு என்பது நமக்கு மட்டுமல்லாமல், நமக்குப் பிறகு நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரிய பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருக்கும். ஆனால் காப்பீடு விஷயத்தில் நிறையப் பேர் அலட்சியமாக இருக்கின்றனர்.
Samayam Tamil insurance


இது தொடர்பாக நவி ஹெல்த் இன்சூரன்ஸ் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு 4 பேரில் ஒருவர் மருத்துவக் காப்பீடு தேவையில்லை என்று நம்புவதாகக் கூறியுள்ளனர். குறைந்த மாதாந்திர பிரீமியம், மறைமுகக் கட்டணங்கள் இல்லாதது மற்றும் எளிதான ஆப்-அடிப்படையிலான அணுகல் போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

இந்தியாவில் பலர் சுகாதார காப்பீடு பற்றி அறிந்திருந்தும் அதை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். சுகாதார காப்பீடு வாங்காத 2 பேரில் ஒருவர் காப்பீட்டை ஒரு சிக்கலான தயாரிப்பாக பார்க்கின்றனர். உடல்நலக் காப்பீடு வாங்காத ஒவ்வொரு 4 பேரில் தாங்கள் ஆரோக்கியமாக இருந்தால் காப்பீடு தேவையில்லை என்று கூறுகின்றனர்.

சுகாதார காப்பீடு வாங்கும் ஒவ்வொரு 4 பேரில் ஒருவர், நீங்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால் அதை வாங்குவதில் எந்த லாபமும் இல்லை, எனவே அதை வாங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகின்றனர். அதேபோல, சுகாதார காப்பீடு வாங்காத ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் பிரீமியம் விலை அதிகம் என்ற காரணத்தால் அதை வாங்குவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.


நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு இல்லாததால் சந்தித்த பிரச்சினைகளைப் பார்த்த பிறகு தாங்களும் காப்பீடு வாங்க முடிவு செய்ததாக 5 பேரில் 3 பேர் கூறியுள்ளனர். ஒவ்வொரு 2 பேரில் ஒருவர் சமூக ஊடக தளங்கள் மூலமாக காப்பீடு குறித்து புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். உடல்நலம் குறித்து கவலை வரும்போதுதான் காப்பீடு குறித்து யோசிப்பதாக பெரும்பாலானோர் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்