ஆப்நகரம்

Wipro ஊழியர்கள் ஆபீஸ் வந்தே ஆகனும்.. நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

விப்ரோ ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என நிறுவனத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Oct 2022, 3:49 pm
உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி அளித்தன. கொரோனா பாதிப்பு குறைந்தபின்பும் ஏராளமான ஊழியர்கள் இன்னும் வீட்டில் இருந்தே Work from Home முறையில் வேலை செய்து வருகின்றனர்.
Samayam Tamil Wipro back to office


இவ்வகையில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ஐடி நிறுவனமும், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐடி நிறுவனமான விப்ரோ (Wipro) ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். தனது ஊழியர்களை வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அக்டோபர் 10 முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு வளாகங்கள் திறக்கப்படும் என்றும் இந்திய ஊழியர்களிடம் கூறியுள்ளது. மேலும் ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று முறை அலுவலகங்களுக்கு வெளியே வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறியதாவது பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகம் வர விரும்புவதாகவும், தொற்று குறைவுக் காரணங்களால் வேலைக்கு வரும் இந்நடவடிக்கை நிறுவனம் மேற்கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

இதற்குமுன் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் (TCS) ஊழியர்களில் இன்னும் பலர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய வேண்டும் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்