ஆப்நகரம்

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை.. மத்திய அரசு நம்பிக்கை!

விரைவில் பெட்ரோல் வாகனங்களுக்கு ஈடாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை வந்துவிடும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Jun 2022, 3:37 pm
இந்தியாவில் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அரசு தரப்பிலிருந்தும் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. எரிபொருள் பயன்பாடு குறைவு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயனாளிகளை வெகுவாக ஈர்க்கின்றன. இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் இப்போது பெட்ரோல் - டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
Samayam Tamil electric vehicles


எலெக்ட்ரிக் வாகனங்களில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் அவற்றின் விலை சற்று அதிகம்தான். ஆனால் பெட்ரோல் - டீசல் விலை இப்படியே அதிகரித்துக் கொண்டே சென்றால் எதிர்காலத்தில் யாருமே பெட்ரோல் போட முடியாது என்ற அச்சத்தில் இப்போதே நிறையப் பேர் எலெக்ட்ரிக் வானங்களுக்கு மாறியுள்ளனர். இந்நிலையில், இன்னும் சில காலத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையானது சாதாரண பெட்ரோல் - டீசல் வாகனங்களின் விலைக்கு ஈடாக வந்துவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கை நிறைய பென்சன்.. கடைசி காலத்தில் கவலையே இல்லை!

இதுகுறித்து நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், “பெட்ரோல், டீசலுக்கு பதிலாக தாவரங்களில் இருந்து எத்தனால் எடுத்து அதைப் பயன்படுத்த ஊக்குவித்து வருகிறோம். இன்னும் ஒரு ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு ஈடாவ வந்துவிடும். அதற்காக முயற்சிக்கிறோம். இதன் மூலம் எரிபொருள் செலவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். தற்போது பேட்டரி போன்றவற்றின் செலவு அதிகமாக இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருக்கிறது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்